

திருச்சிக்கு நேற்று வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், விவசாய சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங் கிய மனுக்களை வழங்கினர்.
கொடியாலம் ஊராட்சி புலிவ லத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் அளித்த மனு: உய்யக்கொண்டானின் தலைப்புப் பகுதியான பேட்டைவாய்த்தலை முதல் கடைமடையான வாழவந் தான்கோட்டை வரை முழுமையாக தூர்வாரி இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்.
காவிரி, கொள்ளிடம் ஆறுக ளில் மணல் அள்ள நிரந்தர தடை விதிப்பதுடன், காவிரியில் மகேந்திரமங்கலம், திருஈங்கோய் மலை, அய்யம்பாளையம், பேட்டை வாய்த்தலை, வேங்கூர் ஆகிய பகுதிகளிலும், கொள்ளிடத்தில் நொச்சியம், கூகூர் ஆகிய பகுதி களிலும் கதவணைகள் அமைக்க வேண்டும்.
முக்கொம்பில் சர் ஆர்தர் காட்டன் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆகியோருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும். ரங்கம் நாட்டு வாய்க்காலுக்கு காவிரியில் தடுப்புச் சுவர் அமைத்து பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். கொடி யாலம் நான்கு பிரிவு வாய்க் காலைச் சீரமைக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டிருந்தது.
திருச்சி சுற்றுலா மாளிகையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டி யன் அளித்த மனு: கர்நாடகம் தமிழகத்துக்கு மாதாந்திர அடிப் படையில் தர வேண்டிய தண் ணீரைப் பெறும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்ட முதல்வர் வலியுறுத்த வேண்டும்.
கரோனாவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் கடன் தவணை வசூலிப்பதைத் தடுத்து நிறுத்தவும், கடன் தள்ளுபடி செய்யவும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுத வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடப்பதால், அதன் நிர்வாகக் குழுவைக் கலைத்து விட்டு, விவசாயிகள் அடங்கிய நிர்வாகக் குழுவை அமைக்க வேண்டும். மதுரையில் ஒருங்கிணைந்த வேளாண் பல்கலைக்கழகமும், திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தை மையமாக வைத்து வேளாண் கல்லூரியும் அமைக்க வேண்டும்.
கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைக் கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்துவதுடன், ராசிமணலில் தமிழக அரசு அணைக் கட்டும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். கடல்வாழ் தாவரங்களின் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரங் கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்.