

காவல் துறையினரைப் போன்று கரோனா ஊரடங்கு காலத்தில் களப் பணியாற்றும் தீயணைப்பு மற்றும் சிறைத் துறையினரையும் முன்களப்பணியாளராக அறிவித்து, அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபடும் சுகாதாரம், காவல் உள்ளிட்ட துறையினரை முன்களப் பணியாளர்களாக முதல் வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் காவல் துறை உள்ளிட்டோருடன் இணைந்து களப்பணியில் ஈடுபடுவதாகவும், தங்களையும் முன்களப் பணியாளர் களாக அரசு அறிவித்து, ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என தீயணைப்பு மற்றும் சிறைத் துறையினர் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறியது:
தீயணைப்புத் துறையினர் ஆண்டு முழுவதும் தீ விபத்துகள் மற்றும் பல்வேறு மீட்புப் பணிகளை தொடர்ந்து செய்கிறோம். கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளைச் செய்கி றோம். சீருடைப் பணியாளர்கள் என்ற அடிப்படையில்தான் தீய ணைப்புத் துறையினரும் தேர்வு செய்யப்படுகிறோம். எனவே காவல்துறையினருக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்குவதைப் போன்று எங்க ளுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றனர்.
சிறைத் துறையினர் கூறிய தாவது: கரோனா தொற்று காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் கள் கைது செய்யப்பட்டு சிறை களில் அடைக்கப்படும்போது, அவர்களை கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. தமிழக அளவில் பல்வேறு சிறைகளில் ஆட்கள் பற்றாக்குறை நிலவும்போது, மதுரை, நெல்லை போன்ற மத்திய சிறைகளில் இருந்து மாற்றுப் பணியாக சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சிறைக்காவலர்கள் ரயில் மூலம் சென்று வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் எங்களையும் முன்களப் பணி யாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றனர்.