ஹாட் லீக்ஸ்: திமுக ஐடி-யை அதிரவைத்த அதிமுக ஐடி!

ஹாட் லீக்ஸ்: திமுக ஐடி-யை அதிரவைத்த அதிமுக ஐடி!

Published on

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய பேட்டிகளில் எல்லாம் என்னுடைய தாத்தா முதல்வர், தந்தை அமைச்சர் என்று சொல்லி வரும் நிலையில், தியாகராஜனின் தாத்தா பி.டி.ராஜன் வெறும் 143 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தவர் என்று தகவலைத் துருவி எடுத்துப் போடிருக்கிறது அதிமுகவின் ஐடி விங்க். ‘1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த பொப்பிலி அரசர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் கப்பல் பயணம் என்பதால், அவர் மீண்டும் முதல்வர் பணிக்குத் திரும்ப 4 மாதங்கள் ஆகும் என்பதால் இடைக்கால முதல்வராக பி.டி.ராஜனை அமரவைத்துவிட்டுப் போனார். அதாவது இரா.நெடுஞ்செழியன் போல இடைக்கால முதல்வராக மட்டுமே இருந்திருக்கிறார் அவர்’ என்று ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது மதுரை அதிமுக ஐடி விங். திமுகவின் ஐடி விங் செயலாளருக்கே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள் அதிமுக ஐடி விங் கில்லாடிகள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in