அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பரிதாப பலி

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பரிதாப பலி
Updated on
1 min read

வியாசர்பாடியில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் அழைத்துச் சென்ற பசு மாடும் இறந்துவிட்டது.

சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் 6-வது தெருவில் வசித்தவர் லட்சுமி (55). மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்துவந்தார். இவரது 2 மகள்கள் திருமணமாகி வெவ்வேறு இடத்தில் வசிக்கின்றனர். வியாசர்பாடி கோல்டன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக லட்சுமி, தனது பசு மாட்டை நேற்று அதிகாலை 5 மணியளவில் அழைத்துச் சென்றார்.

அந்த பகுதியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தது. இதை கவனிக்காத லட்சுமி, தண்ணீரில் கால் வைத்ததும் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே பலியானார். அவரது பசு மாடும் இறந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், சாலையின் இருபுறமும் நின்று, அந்த வழியே வேறு யாரும் செல்லாமல் பார்த்துக்கொண்டனர். தகவறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இது தொடர்பாக எம்கேபி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த வாரம் வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் கணவன், மனைவி இருவரும் மின் கம்பி அறுந்து விழுந்து இறந்தனர். அமைந்தகரை செனாய் நகரில் செண்பகாதேவி என்பவரும் மின்சாரம் பாய்ந்து பலியானார். அடுத்த அசம்பாவிதம் நடப்பதற் குள், அறுந்துவிழும் நிலையில் உள்ள மின்கம்பிகளை கண்டறிந்து அவற்றை மாற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in