

மதுரையில் கரோனா மருத்துவமனை முன் குவியும் வாகனங்களை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீஸார் திணறுகின் றனர். தொற்று பரவலைத் தடுக்க மைக் மூலம் தொடர்ந்து அறி வுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள கரோனா அரசு சிறப்பு மருத்துவமனைக்கு அதிக அளவில் வருகின்றனர். அங்குள்ள ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தொற்று பாதிக்கப்பட்டு அனு மதிக்கப்பட்டுள்ள நபர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் ஏராளமானோர் நாள் முழுவதும் கரோனா மருத்துவமனை பகுதியில் திரளுவதால் பனகல் ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.
மருத்துவமனைக்கு எதிரே நிறுத்தப்படும் பைக், கார் போன்ற வாகனங்களால் அந்த ரோடு எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தாலும், அவர்களின் அறிவுரையைப் பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் அங்கு கூடுவதால் கரோனா தொற்று பரவல் அதிகரிக் கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமும் கரோனா மருத்துவ மனை முன் குவியும் வாகனங் களை அப்புறப்படுத்த முடியாமல் அங்கிருக்கும் போலீஸார் திணறி வருகின்றனர். வேறு வழி யின்றி மைக் மூலம் வாகன உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அதையும் சிலர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் சம்பந்தப்பட்ட வாகனங்களின் பதிவெண்களை சேகரித்து அபராதம் விதிக்க முடி வெடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: கரோனா தொற்று பரவி வருவதால் மக்களை மென்மையாக அணுகுகிறோம். இதை தவறாக பயன்படுத்தி மக்கள் கரோனா விதிமுறைகளை மீறுகின்றனர். நாங்களும் முடிந்தவரை கரோனா சிறப்பு வார்டு பகுதியில் கூட்டத்தை குறைத்து சமூக இடைவெளியை பின்பற்றச் செய்ய எங்களாலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பு தர வேண்டும்.
கரோனா தொற்று பரவல் ஏற் பட வாய்ப்பளிக்கும் வகையில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி திரள்வோர் மீதும், அரசு மருத்துவமனை கரோனா வார்டு முன் வாகனங் களை நிறுத்துவோர் மீதும் உயர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று கூறினர்.