புதுச்சேரியில் ஒரு லட்சத்தைக் கடந்த கரோனா தொற்று; புதிதாக 1,137 பேர் பாதிப்பு: 20 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் ஒரு லட்சத்தைக் கடந்த கரோனா தொற்று; புதிதாக 1,137 பேர் பாதிப்பு: 20 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுச்சேரியில் கரோனா தொற்றின் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. புதிதாக 1,137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(மே.27) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,473 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 833 பேருக்கும், காரைக்காலில் 234 பேருக்கும், ஏனாமில் 32 பேருக்கும், மாஹேவில் 38 பேருக்கும் என மொத்தம் 1,137 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 15 பேரும், காரைக்காலில் 2 பேரும், ஏனாமில் 3 பேரும் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,455 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 ஆகவும் உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 677 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மருத்துவமனைகளில் 1,730 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,743 பேரும் என மொத்தம் 14 ஆயிரத்து 473 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 1,486 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 84 ஆயிரத்து 749 (84.18 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 10 லட்சத்து 15 ஆயிரத்து 527 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் 8 லட்சத்து 83 ஆயிரத்து 6 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 297 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in