ஓசூரில் கூலித் தொழிலாளிக்குக் கருப்புப் பூஞ்சை பாதிப்பு: அறுவை சிகிச்சை மூலம் கண் அகற்றம்

ஓசூரில் கூலித் தொழிலாளிக்குக் கருப்புப் பூஞ்சை பாதிப்பு: அறுவை சிகிச்சை மூலம் கண் அகற்றம்
Updated on
1 min read

ஓசூரில் கூலித் தொழிலாளிக்குக் கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது கண் அகற்றப்பட்டு, உயிர் காப்பாற்றப்பட்டது.

ஓசூர் மூக்கண்டப் பள்ளியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பசவராஜ். 45 வயதான இவர் தனக்கு இடது கண் பார்வை தெரியவில்லை எனக் கூறி, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், இடது கண்ணைக் கருப்புப் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. மருத்துவமனை டீன் சுந்தரவேல் தலைமையில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் நிகில் பரத்வாஜ், நேற்று பசவராஜுக்கு அறுவை சிகிச்சை செய்தார். சிகிச்சையில் அவரது இடது கண் அகற்றப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது.

பசவராஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. நீண்ட காலம் அவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாலேயே கருப்புப் பூஞ்சை நோய் தாக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in