ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Updated on
1 min read

புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு வழித்தடங்களில் 50 சிறப்பு பேருந்துகளை மாநகர போக்கு வரத்து கழகம் இயக்க உள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரி கள் கூறியது: ஆங்கில புத்தாண் டையொட்டி மெரீனா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வரும் 31-ம் தேதி அதிகளவில் மக்கள் செல்வார்கள்.

இதேபோல், 1-ம் தேதி அதி காலையில் பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், சாந்தோம் சர்ச், பெசன்ட்நகர் சர்ச் உள் ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கும், வண்டலூர், கோவளம், மெரீனா உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக் கும் அதிகளவில் மக்கள் செல் வார்கள். எனவே, மக்களின் வசதிக் காக போதிய அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்க கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள் ளோம். குறிப்பாக தாம்பரம், குன்றத்தூர், திருவொற்றியூர், திருவான்மியூர், பெசன்ட்நகர், பிராட்வே, அடையார் உள்ளிட்ட முக்கியமான வழித்தடங்களில் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in