அதிமுக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி மரணம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி மரணம்
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, அதிமுக ஆட்சிக்காலத்தில் 1993-96ம் ஆண்டு வரை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச் சராக பதவி வகித்தார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரமூர்த்தி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிமுக-வினர் அஞ்சலி செலுத்தினர். அவருக்கு சுஜாதா என்ற மனைவியும், ஜெய சிம்மன், சஞ்சீவ் என்ற இரு மகன் களும் உள்ளனர். ஈஸ்வரமூர்த்தி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in