

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜெ.பிரகாஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதியில் தே.ஜ. கூட்டணியில், அதிமுக சார்பில் வேட்பாளர் வையாபுரி மணிகண்டனும், காங்கிரஸ் சார்பில் செந்தில்குமரனும், சுயேச்சையாக ஜெ.பிரகாஷ்குமாரும் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் வையாபுரி மணிகண்டனுக்கும், சுயேச்சை வேட்பாளர் ஜெ.பிரகாஷ்குமாருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
ஆரம்பம் முதலேயே இவர்கள் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதியாக சுயேச்சை வேட்பாளர் ஜெ.பிரகாஷ்குமார் 8,778 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் வையாபுரி மணிகண்டன் 7,844 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் 4,402 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். மக்கள் நீதி மய்யம்-732, நாம் தமிழர் கட்சி -778, சிபிஎம் -321, அமமுக -51 வாக்குகள் பெற்றன. நோட்டாவில் 264 வாக்குகள் பதிவாகின.