

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராஜவேலு 6,638 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் தே.ஜ. கூட்டணியில், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜவேலுவும், காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விஜயவேணியும் போட்டியிட்டனர். இதில் முதல் சுற்றில் இருந்தே ராஜவேலு முன்னிலை வகித்து வந்தார்.
இறுதிச் சுற்றின் முடிவில் 15,978 வாக்குகள் பெற்று ராஜவேலு வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் விஜயவேணி 9,340 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம் 6,638 வாக்குகள் கூடுதலாகப் பெற்ற ராஜவேலு, தொகுதியைத் தன் கைவசமாக்கிக் கொண்டார்.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏம்பலம் தொகுதியில் போட்டியிட்டு விஜயவேணியிடம் தோல்வியடைந்த நிலையில், தற்போது நெட்டப்பாக்கம் தொகுதிக்கு மாறிய ராஜவேலு, விஜயவேணியை வென்றது குறிப்பிடத்தக்கது