

புதுச்சேரியின் இந்திரா நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம் 18,531 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திரா நகர் தொகுதியில் தே.ஜ. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ஆறுமுகமும், காங்கிரஸ் சார்பில் கண்ணனும் போட்டியிட்டனர். இதில் தொடக்கம் முதலே என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக 21,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் கண்ணன் 3,310 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். 18,531 வாக்குகள் வித்தியாசத்தில் ஆறுமுகம் இந்திரா நகர் தொகுதியில் தனது வெற்றிக் கொடியை நாட்டினார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேல்-1,218, நாம் தமிழர் கட்சி-1,774, அமமுக வேட்பாளர்-83 வாக்குகள் பெற்றனர். நோட்டாவில் 569 வாக்குகள் பதிவாகின.