புதுச்சேரி தேர்தல்: ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் வெற்றி

புதுச்சேரி தேர்தல்: ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் வெற்றி
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலம், ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் 2,240 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதியில் தே.ஜ. கூட்டணியில், என்.ஆர் காங்கிரஸ் சார்பில் லட்சுமிகாந்தனும், காங்கிரஸ்-திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் போட்டியிட்டனர்.

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொகுதியில் முதல் சுற்றிலிருந்தே என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்து வந்தார். காங்கிரஸ் வேட்பாளர் பின்னடைவைச் சந்தித்தார். நிறைவாக லட்சுமிகாந்தன் 15,624 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி 13,384 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமியைவிட 2,240 வாக்குகள் கூடுதலாகப் பெற்று லட்சுமிகாந்தன் ஏம்பலம் தொகுதியைத் தனதாக்கிக் கொண்டார்.

ஏம்பலம் தொகுதியில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கந்தசாமி வெற்றி பெற்று அமைச்சரானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லட்சுமிகாந்தன் அப்போது தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சோமநாதன்- 618, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுதா- 590 வாக்குகள் பெற்றனர். நோட்டாவில் 193 வாக்குகள் பதிவாகின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in