

புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக வேட்பாளர் விவிலியன் ரிச்சர்ட்ஸ் 496 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தே.ஜ. கூட்டணியில் நெல்லித்தோப்பு தொகுதியில், முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார் மகன் விவிலியன் ரிச்சர்ட்ஸும் , காங்கிரஸ் - திமுக கூட்டணியில், திமுக சார்பில் கார்த்திகேயனும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் விவிலியன் ரிச்சர்ஸ் முன்னிலை வகித்து வந்தார்.
இறுதியாக அவர் 11,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடும் போட்டி கொடுத்த திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 11,261 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம் 496 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் விவிலியன் ரிச்சர்ஸ் நெல்லித்தோப்பு தொகுதியைத் தக்கவைத்தார்.
இதுபோல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகேசன்-1,659, நாம் தமிழர் கட்சி சசிகுமார்-1,521, எஸ்டிபிஐ வேட்பாளர் அனிபா-139 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினர். நோட்டாவில் 537 வாக்குகள் பதிவாகின.