

புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரைவிட 2,750 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தே.ஜ. கூட்டணியில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ்-திமுக கூட்டணியில், திமுக சார்பில் கிருஷ்ணன் ஆகியோருக்கு இடையே நேரடி மோதல் நிலவியது.
இதில் ஆரம்பம் முதலே பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கும், திமுக வேட்பாளர் கிருஷ்ணனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதில் நிறைவாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 14,939 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கிருஷ்ணன் 12,189 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். 2,750 வாக்குகள் அதிகம் பெற்று நமச்சிவாயம் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் வெற்றி பெற்ற நமச்சிவாயம் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். அதன் பிறகு தேர்தல் நெருக்கத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபாலகிருஷ்ணன்-238, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சித்ரா-485, அமமுக வேட்பாளர் தனவேலு-57 வாக்குகள் பெற்றனர். நோட்டாவில் 433 வாக்குகள் பதிவாகின.