

புதுச்சேரி மாநிலம், மங்களம் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் தேனி ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மங்களம் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் தேனி ஜெயக்குமாரும், காங்கிரஸ்-திமுக கூட்டணியில், திமுக சார்பில் சன் குமாரவேலுவும் போட்டியிட்டனர். முதல் சுற்று முதலே என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தேனி ஜெயக்குமார் முன்னிலை வகித்து வந்தார். நிறைவாக அவர் 16,972 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் சன்குமார வேல் 14,221 வாக்குகள் பெற்றார்.
இருவருக்குள்ளும் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், இறுதியாக தேனி ஜெயக்குமார், சன் குமாரவேலுவைவிட 2,751 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதுபோல் மக்கள் நீதி மய்யம் சுப்பிரமணி -279, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பரத் கலை -195, அமமுக வேட்பாளர் கணபதி-195 வாக்குகள் பெற்றனர். நோட்டாவுக்கு 367 வாக்குகள் பதிவாகின.