

புதுச்சேரி மாநிலம், கதிர்காமம் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.பி ரமேஷ் 12,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் கே.எஸ்பி ரமேஷும், காங்கிரஸ்-திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் செல்வநாதனும் களம் காண்டனர். இதில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.பி ரமேஷ் நிறைவாக 17,775 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் செல்வநாதன் 5,529 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். கே.எஸ்.பி ரமேஷ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட செல்வநாதனை விட 12,246 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபஸ்ரீ 2,266 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் செல்வ கணேசன் 184 வாக்குகளையும் பெற்றனர். நோட்டாவில் 880 வாக்குகள் பதிவாகின.