புதுச்சேரி தேர்தல்: யார் முன்னிலை?- தொகுதிகள் நிலவரம்

புதுச்சேரி தேர்தல்: யார் முன்னிலை?- தொகுதிகள் நிலவரம்
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குகள் அடிப்படையில் என்.ஆர்.காங். கூட்டணி 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்.6ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு, அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையங்கள் என, 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று (மே. 2) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி என்.ஆர்.காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

உப்பளம் தொகுதி - முதல் சுற்றில் திமுக முன்னிலை

திமுக தொடர்ந்து முன்னிலை.

அனிபால் கென்னடி ( திமுக) - 8,518

அன்பழகன் (அதிமுக) - 4,791 வாக்குகள்.


நெல்லித்தோப்பு தொகுதி - பாஜக முன்னிலை

விவிலியன் ரிச்சர்ட் (பாஜக) - 6,418 வாக்குகள்

கார்த்திகேயன் (திமுக) - 5,529 வாக்குகள்.

ஏனாம் தொகுதி - முதல் சுற்றில் என். ஆர்.காங்கிரஸ் முன்னிலை

ரங்கசாமி (என்.ஆர்.காங்கிரஸ்) - 1,174

கொள்ளப்பள்ளி சீனிவாஸ் (சுயேச்சை) - 1,036 வாக்குகள்.

மங்களம் தொகுதி - என்.காங்கிரஸ் முன்னிலை

ஜெயக்குமார் (என்.ஆர்.காங்கிரஸ்) - 4,566 வாக்குகள்

சன் குமாரவேல் (திமுக) - 3,926 வாக்குகள்.

ஏம்பலம் தொகுதி: என்.காங்கிரஸ் முன்னிலை

லஷ்மிகாந்தன் (என்ஆர் காங்.,) 4,768

கந்தசாமி (காங்கிரஸ்) 3,637 வாக்குகள்

லாஸ்பேட் தொகுதி

காங்கிரஸ் முன்னிலை.

வைத்தியநாதன் ( காங்கிரஸ்) 2,636.

சாமிநாதன் (பாஜக) 1,459 வாக்குகள்.

மங்களம் தொகுதி

என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை.

ஜெயக்குமார் (என்ஆர் காங்.,) - 8759

சன் குமாரவேல் - 6697 வாக்குகள்.

மாகே தொகுதி

காங்கிரஸ் முன்னிலை 6வது சுற்று

ரமேஷ்பரம்பத் - 6,222

அரிதாஸ் மாஸ்டர் - 5,494

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in