

மதுரையில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் ‘பேஸ் ஷீல்டு மாஸ்க்’ (அகன்ற முகக்கவசம்), கையுறை அணியாமல் பணிபுரிவதால் கரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே, வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக் கையுடன் செயல்பட வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேமா னந்த் சின்கா அறிவுறுத்தியுள்ளார்.
துணியாலான முகக்கவசம் அணிவதுடன் கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் வகையிலான பேஸ் ஷீல்டு மாஸ்க்கையும் (அகன்ற முகக் கவசம்) அணிந்து போலீஸார் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விதிமுறைகளை போலீஸார் பலர் பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் போலீஸாரிடமிருந்து பொதுமக்களுக்கும், பொதுமக்களிடமிருந்து போலீஸாருக்கும் கரோனா பரவ வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறி யதாவது: கரோனா தொற்று தடுப்புப் பணியிலுள்ள சுகாதாரத் துறையினர், போலீஸார் உள்ளிட்ட முன்களப் பணி யாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
முகக்கவசம் அணிவது மட்டு மின்றி பேஸ் ஷீல்டு மாஸ்க்கையும், கையுறைகளையும் போலீஸார் அணிந் திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.
அதோடு பணிக்கு வரும் போலீ ஸாருக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப நிலை பரி சோதனை, பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் பரிசோதனை செய்தல், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றையும் கட்டாயப்படுத்த வேண்டும். காவல்நிலைய வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கடந்த ஆண்டு கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது கடைப்பிடித்த முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை தற்போது போலீஸார் பின்பற்றி வருகின்றனர். வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸார் கையுறை, பேஸ் ஷீல்டு மாஸ்க் போன்றவற்றை அணிய அறிவுறுத்தப்படும்" என்றார்.