

வெள்ளம் பாதித்த மக்களுக்கு கூடு தலாக உதவும் நோக்கில் இந்த ஆண்டு அதிமுக சார்பில் நடத்தப் படும் கிறிஸ்துமஸ் விழா ரத்து செய் யப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு மாதத்துக் கும் மேலாக பெய்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மக் கள் மிகுந்த இழப்புக்கும் துயரத் துக்கும் ஆளாகியுள்ளனர். பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் போர்க்கால அடிப்படை யில் வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு வதற்கான உதவிகள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்படும்.
வெள்ள நிவாரணப் பணி பிரம் மாண்டமானது. அதில் பங்குபெற வேண்டிய பொறுப்பும் கடமையும் எல்லோருக்கும் உள்ளது. லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட் டுள்ள இவ்வேளையில், கிறிஸ்து மஸ் விழாவை எளிமையாக கொண்டாடி, அதன்மூலம் மக்களுக்கான உதவிகளை இன்னும் கூடுதலாக வழங்கும் சிந்தனை பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளிடம் உருவாகியுள்ளது.
மக்களுக்கு கூடுதலாக உதவும் நோக்கில், அதிமுக சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு சார் பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கிறிஸ்துமஸ் விழாவை மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்நீக்கும் தொண்டு விழாவாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.