

கடுமையான வெப்பத்தால் ஈரப்பதத்தின் தொடர் அளவாக இருப்பதால் பிற்பகல் முதல் காலை வரை இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் என்பதால் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
“கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் தொடர் அளவாக (Relative Humidity) 60 முதல் 80% வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை இயற்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும். தேவைக்கேற்ப குடிநீர். இளநீர். மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் பழவகைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். பருத்தி ஆடைகளை அணியவும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தேர்தல் வாக்குப்பதிவு என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் வெளியில் வருவார்கள். வெயிலில் வாக்குச் சாவடியில் அதிக நேரம் நிற்கும் நிலை ஏற்படும் என்பதால் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிப்பது நல்லது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.