

அரவக்குறிச்சி தேர்தலை ஒத்தி வைக்க வலியுறுத்தி, கரூர் ஆட்சி யர் அலுவலகத்தை நேற்று விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தினரை சட்டையில்லாமல் செல்ல அனுமதி மறுத்து, வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காததால் தங்களால் வேட்பு மனுத்தாக்கல் செய்யமுடியவில்லை.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டபோது, சட்டையில் லாமல் வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் ஆட்சேபணை இல்லை என்றனர். எனவே, நாங்கள் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டி யிட வாய்ப்பளிக்கும் வகையில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை நேற்று முற்றுகையிட்டு தரை யில் அமர்ந்தும், படுத்தும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகளிடம் கோட்டாட்சியர் பாலசுப்பிர மணியன் பேச்சு வார்த்தை நடத்தியபோதும், ஆட்சியரிடம் கோரிக்கையை தெரிவித்தபின்பே முடி வெடுப்போம் என தெரிவித்தனர்.
கரூர் மாவட்ட புதிய ஆட்சி யரான பிரஷாந்த் எம் வடநேரே தனக்கு கூட்டங்கள் இருப்பதால், பேச்சுவார்த்தைக்கு ஆட்சியர் அலுவலகத்துக்கு வருமாறு அழைத்த போதும், ஆட்சியர் கீழே வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் அங்கு வந்து விவசாயிகளிடம் மனுவை பெற்றுக்கொண்டார். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.