ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழக இளைஞர்கள் துருக்கியில் சிக்கினர்: நாடு கடத்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழக இளைஞர்கள் துருக்கியில் சிக்கினர்: நாடு கடத்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை
Updated on
1 min read

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக சிரியா செல்ல முயன்ற தமிழக இளைஞர்கள் 2 பேரை துருக்கி போலீஸார் பிடித்து நாடு கடத்தினர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

மனித உயிர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் ஐஎஸ் தீவிரவாத இயக்கம், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தங்களது இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் பணியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலை யில், தமிழகத்தில் இருந்து 2 பேர் ஐஎஸ் இயக்கத்தில் சேருவதற்கு முயற்சி செய்தி ருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உளவுப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது பி.காம் பட்டதாரியும் கரூரைச் சேர்ந்த 22 வயது இளைஞரும் நண்பர்கள். கரூர் இளைஞர், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும், சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு பெங்களூருவில் வேலை கிடைத்திருப் பதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள் ளனர். பின்னர் அங்கிருந்து துருக்கிக்கு சென்று, சிரியா செல்ல முயன்றுள்ளனர்.

துருக்கி விமான நிலையத்தில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிரியா செல்வதற்கான காரணம் குறித்து கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். தொடர்ந்து இருவரிடமும் துருக்கி போலீஸ் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், இருவரும் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் சேரப்போவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து இந்தியாவுக்கு தகவல் தெரிவித்த துருக்கி அதிகாரிகள், இரு இளைஞர்களையும் மீண்டும் இந்தியாவுக்கே நாடு கடத்தினர்.

பெங்களூர் விமான நிலையம் வந்திறங்கிய இளைஞர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ‘‘ஐஎஸ் அமைப்பு தான் இனி உலகை ஆளப்போகிறது. இதனால்தான் அதில் சேர முயற்சி செய்தோம்’’ என்று இருவரும் தெரிவித்துள் ளனர். இருவரின் இணையதள முகவரியை ஆய்வு செய்தபோது, ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு கொள்வது எப்படி, அதில் உறுப்பி னராக சேருவது எப்படி என பல நாட்கள் தொடர்ந்து இணையதளத்தில் தேடியி ருப்பது தெரிந்தது. இவர்களுக்கு வேறு சிலரும் உதவியுள்ளனர். இரு இளைஞர் களின் பெற்றோர்களிடம் விசாரித்தபோது, மகன்களின் செயல்களை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இளைஞர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்து விட்டோம். அவர்கள் மீது வழக்கு எதுவும் போடவில்லை. இருந்தாலும் இருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in