தமிழகத்தில் நலிந்துவரும் சிமென்ட் சிலை தயாரிப்பு தொழில்

தமிழகத்தில் நலிந்துவரும் சிமென்ட் சிலை தயாரிப்பு தொழில்
Updated on
1 min read

தமிழகத்தில் நலிந்துவரும் சிமென்ட் சிலை தயாரிப்பு தொழிலை காக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோவை, ஈரோடு, பழநி உட்பட பெரும்பாலான பகுதிகளில் சிமென்ட் சிலை தயாரிக்கும் பணியில் பலர் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கிருஷ்ணகிரியில் காந்தி சிலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதியில் சிமென்ட் சிலை தயாரிக்கும் தொழிலில் பல கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல், சிமென்ட், மணல், இரும்புக் கம்பி உள்ளிட்ட மூலப் பொருட்களைக் கொண்டு சுவாமி சிலைகள், தலைவர்கள் சிலைகளை வடிவ மைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

தலைவர்களின் சிலைகளுக்கு அரசு விதித்த கட்டுப்பாடு காரண மாக அவற்றின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. சுவாமி சிலைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான ஜன்னல்கள், தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.

தற்போது கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் போதிய ஆர்டர் இல்லாத காரணத் தால் கலைஞர்கள் இந்த தொழிலை கைவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டதாகவும், ஒருசிலரே சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருவ தாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிற்பி.ராஜ் கூறியதாவது:

உருவாக்கப்பட வேண்டிய சிலை களின் உருவங்களை மனதில் வரைந்து, அதனை முழு வடிவ மாகக் கொண்டுவரும் கலையே சிற்ப கலையாகும். ஒரு சிலை தயாரிக்க சுமார் 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிலைகள் தயாரிப்பு தொழி லுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது சிமென்ட், கம்பி, பெயின்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் போதிய அளவு வருமானம் கிடைப்பதில்லை.

கோயில் சிலைகள் ஆர்டர்களும் குறைவாகவே உள்ளது. வீட்டுக் குத் தேவையான சிமென்ட் ஜன்னல் கள், மாடி படிக்கட்டு தடுப்புகள் ஆகியவற்றின் தேவையும் கால மாற்றத்தால் குறைந்து விட்டது.

இதனால் சிற்ப கலைஞர்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். நலிந்துவரும் இந்த தொழிலையும், தொழிலாளர்களையும் காக்க அரசு கட்டிடங்களில் சிமென்ட் மூலம் தயாரிக்கும் ஜன்னல் கள் உள்ளிட்ட சிறு, சிறு பொருட் களை பயன்படுத்த வேண்டும். பூங்கா உள்ளிட்ட இடங்களில் சிமென்ட் மூலம் தயார் செய்யப்படும் கலை பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும். அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி, தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். வயதான கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in