2 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு தாமதச் சம்பளம்; திமுக ஆட்சியில் சரி செய்வோம்: ஸ்டாலின் 

2 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு தாமதச் சம்பளம்; திமுக ஆட்சியில் சரி செய்வோம்: ஸ்டாலின் 
Updated on
1 min read

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சம்பளம் குறித்த தேதியில் போடுவதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை களையப்பட்டு குறித்த நாளில் சம்பளம் வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முகநூலில் பதிவிட்டுள்ளதாவது:

“தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இணையதளம் மூலம் சம்பளம் வழங்குவதற்குத் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருக்கிறது அதிமுக அரசு. ஆனால், சம்பளப் பட்டியலை இணையதளத்தில் ஏற்றுவதில் ஒவ்வொரு மாதமும் குழப்பம் நீடிக்கிறது.

கடந்த இரு ஆண்டுகளில் ஒரு மாதம் கூட குறித்த நேரத்தில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியவில்லை. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பல இடங்களில் இன்னும் பிப்ரவரி மாதச் சம்பளமே பெறவில்லை.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் இணையதளம் மூலமாகச் சம்பளம் வழங்குவதில் உள்ள குழப்பங்கள் சரிசெய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு - ஆசிரியர்களுக்குக் குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in