வாக்காளர்களுக்கு மொத்தமாக அனுப்பப்பட்ட எஸ்எம்எஸ்களுக்கு பாஜக முன்சான்றிதழே பெறவில்லை: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

வாக்காளர்களுக்கு மொத்தமாக அனுப்பப்பட்ட எஸ்எம்எஸ்களுக்கு பாஜக முன்சான்றிதழே பெறவில்லை: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
Updated on
1 min read

வாக்காளர்களுக்கு அனுப்பிய மொத்த எஸ்எம்எஸ்களுக்கு சம்பந்தப்பட்ட பாஜக எவ்வித முன் சான்றிதழும் பெறவில்லை. இதுமாவட்ட தேர்தல் அதிகாரி விசார ணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் மூலமும் விசாரணை நடக்கிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வாக்காளரின் மொபைல் எண் போன்ற தனிநபர் தகவல்களை ஆதாரிடம் இருந்து பெறப்பட்டு பாஜக பிரச்சாரம் செய்வதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் பாஜக அனுப்பியமொத்த எஸ்எம்எஸ் தொடர் பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் உள்ளது.மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்பி யது தொடர்பாக பெறப்பட்ட புகாரை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும், காவல்துறை கண்காணிப் பாளருக்கும் அனுப்பினோம். இந்தமொத்த எஸ்எம்எஸ்களுக்கு சம்பந்தப்பட்ட பாஜக எவ்வித முன்சான்றி தழும் பெறவில்லை. இது மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர் பாக சைபர் கிரைம் மூலமும் விசாரணை நடக்கிறது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி மொத்த எஸ்எம்எஸ் செலவினங்களை அத்தகைய அரசியல் கட்சி மற்றும்அதன் வேட்பாளர்கள் செலவினங் களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்குவோரிடமும், முன்சான்று அளிக்கப்பட்ட எஸ்எம்எஸ் மற்றும் குரல் செய்திகளை மட்டுமே ஒளிபரப்ப அறிவுறுத்தியுள்ளோம். இதை மீறும் சேவை நிறுவனங்கள் மீது விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in