

கடலூர் நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.
கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் புனித வளனார் பள்ளிஅருகே உள்ள பிள்ளையார் கோயிலிலிருந்து நேற்று பிரச்சாரத்தை தொடக்கினார். கடலூர் நகராட்சி பகுதிகளில் 74 இடங்களில் கூட்டணிக்கட்சியினருடன் வாக்குசேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது அமைச்சர் சம்பத் பேசியதாவது:
அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலே முதல்வர் பழனிசாமி ஏராளமான அறிவிப்புகளை வெளியிட் டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி இருக்கிறோம். இந்தத் திட்டங்கள் எல்லாம் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, ஆந்திராவில் இல்லை. அதிமுக ஆட்சியில் மக்கள் நல திட்டங்களை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கின்றது.
தற்போது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,500, 6 சிலிண்டர் இலவசம், விலையில்லா சோலார் அடுப்பு, அரசு கேபிள் டிவி கட்டணம் இலவசம், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, முதியோர்களுக்கு உதவித் தொகை இரட்டிப்பு, பேறுகால உதவித்தொகை 21ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், திருமண நிதி உதவித் தொகை 25 ஆயிரத்திலிருந்து 35ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும், 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும் என பல திட்டங்களை தேர்தல் அறிவிப்பில் வெளியிட்டுள்ளோம் என்று தெரிவித்தார். அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனருந்தனர்.