

திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் கூவம், கொசஸ்தலை, ஆரணி, நந்தியாறு ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதால் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட திருவள்ளூர் மாவட்டம் தீவு போல ஆனது.
ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப் பாலம் மூழ்கியதால் ஊத்துக் கோட்டை- திருவள்ளூர் சாலை யில் போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது. திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற் றின் குறுக்கே நாராயணபுரம் தரைப்பாலம் நீரில் மூழ்கிய தால் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, முத்துக் கொண்டாபுரத்தில் உள்ள பாலமும் பலவீனமடைந்த தால் கே.கே.சத்திரம் - திரு வாலங்காடு சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் அருகே உள்ள தரை பாலத்தின் மீது சில அடிகள் உயரத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிய தால் பாதுகாப்பு கருதி போக் குவரத்தை நிறுத்தப்பட்டது.
திருத்தணியில் ஓடும் நந்தி யாறு கடந்த 20 ஆண்டுகளுக் குப் பிறகு வெள்ளப் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதனால், திருத்தணி அருகே உள்ள தெக்களூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து நேற்று காலை முதல் திருத் தணி- பள்ளிப்பட்டு சாலையில் போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது. ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளதால் ஊத்துக் கோட்டை- திருவள்ளூர் சாலை யில் போக்குவரத்து நடைபெற வில்லை. திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் உடைந்ததால், கடம்பத்தூர்- மணவாளநகர் இடையே போக்குவரத்து துண்டிக்கப் பட்டது.