

கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சம்பத் வாக்கு சேகரித்தார்.
கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சம்பத் கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "முதல்வர் பழனிசாமி பெண்கள் முன்னேற்றத்துக்கு, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றுத் துக்கும் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்.
பெண்களின் கஷ்டத்தைபோக்குவதற்காக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின்,ரூ. 1500, 6 சிலிண்டர்கள், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் சொன்ன திட்டங்களை மட்டுமின்றி சொல்லாத திட்டங்களும் மக் களுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு தொழில் துறையில் மாபெரும் வளர்ச்சி பாதையை அடைந்துள்ளது. என்று தெரிவித்தார்.
முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி மற்றும் அதிமுக, கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.