

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ஆறு சிலி ண்டர்கள் இலவசம் என வாக்குறுதி அளித்துள்ளதால் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, சிலிண் டர்களுடன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று எலியார் பத்தி, வலை யன்குளம், ஆலங்குளம் பகுதி யில் வாக்குச் சேகரித் தார். அப்பகுதி வயல்வெளிகளில் நின்று மல்லிகைப்பூ பறித்துக் கொண்டிருந்த பெண் விவசாயிகளிடம் ராஜன் செல்லப்பா ஆதரவு திரட்டினார். அப்போது ராஜன் செல்லப்பாவும் அவர்களுடன் சேர்ந்து மல்லிகைச் செடிகளில் பூக்களைப் பறித்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, ராஜன்செல்லப்பா தான் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடமெல்லாம், பிரம்மாண்ட காஸ் சிலிண்டர்களையும் கொண்டு சென்று வாக்குச் சேகரித்து வருகிறார்.