

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரில் போளூர் அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும்போது, “போளூர் தொகுதிக்குட்பட்ட அரிசிக்கு புகழ்பெற்ற களம்பூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் அரிசி அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில், சுமார் 100 ஏக்கர் அளவில் உணவுப் பூங்கா அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும். களம்பூரில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்து பயணியர் நிழற்குடை அமைத்து தரப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். செண்பகத்தோப்பு அணையிலிருந்து அலியாபாத் ஏரிக்கு நீர்வரத்து கால்வாயை சீரமைத்து தரப்படும். களம்பூரில் நிரந்தரமான நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வரப்படும். வரும் தேர்தலில் என்னை வெற்றி பெற செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதில், களம்பூர் நகரச் செயலாளர் பஞ்சாட்சரம், அவைத்தலைவர் ராமலிங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.