பெண் யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் உயிரிழந்த யானை.
கோவை மாவட்டம் சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் உயிரிழந்த யானை.
Updated on
1 min read

கோவை சிறுமுகை வனச் சரகத்துக்கு உட்பட்ட பெத்திக்குட்டை பகுதியில் நேற்று முன்தினம் வனப் பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெத்திக்குட்டை, மயில்மொக்கை பகுதியில் பெண் யானையின் சடலம் கிடந்தது தெரியவந்தது.

யானையின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. தகவலறிந்து வந்த வனத் துறை கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, "உயிரிழந்த யானைக்கு 26 முதல் 28 வயது இருக்கலாம். யானை 2 முதல் 3 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம். யானைக்கு ரத்தசோகை இருந்துள் ளது. முழுமை யான காரணத்தை அறிவதற்காக, யானையின் உடல்பாகங்களை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளோம். முடிவுவந்த பிறகே காரணம் தெரியவரும்"என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in