

திமுகவின் தேர்தல் அறிக்கை டிஷ்யூ பேப்பர் போன்றது என்று பாஜவின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் மனுத்தாக்கல் தீவிரமாக நடந்து வருகிறது. காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா களம் காண்கிறார். இதனைத் தொடர்ந்து காரைக்குடியில் உள்ள தேவகோட்டையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் ஹெச்.ராஜா.
பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “அம்மா உணவகத்தின் பெயரை மாற்றி வைப்பது தேர்தல் அறிக்கையா? நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் அளிப்போம் என்று முன்னர் திமுக தெரிவித்தது. வழங்கினார்களா? இல்லை அல்லவா...
திமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. அந்தத் தேர்தல் அறிக்கை டிஷ்யூ பேப்பர் போன்றது. திமுக விளையாடிப் பார்க்க நினைகிறது. மக்கள் அவர்களை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.