

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட் பாளரை மாற்றக் கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.
தி.மலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாள ராக தூசி கே.மோகன் எம்எல்ஏ நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர், செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக் கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டுள்ளது. செய்யாறு, வெம்பாக்கம் அடுத்த மாங்கால் கூட்டுச்சாலை மற்றும் அனக்காவூர் அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் அதிமுகவினர் கடந்த 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஈடுபட்டனர்.
தற்போது சுவரொட்டி மூலமாக எதிர்ப்பை வெளிப் படுத்தி உள்ளனர். செய்யாறு தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், “அதிமுக தொண்டர்களின் மனக் குமறல் என்ற தலைப்பில் வேட்பாளர் தேர்வில் தலைமை மீது எதிர்ப்பு, தூசி கே.மோகனை தவிர வேறு வேட்பாளரை அறிவித்தால் வெற்றி நிச்சயம்” என குறிப்பிடப் பட்டுள்ளது.
இதையறிந்த தூசி கே.மோகன் ஆதரவாளர்கள், சுவரொட்டிகளை கிழித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.