அதிமுகவின் தேர்தல் அறிக்கையால் திமுக என்ற கட்சியே இருக்காது: சிவகங்கை அதிமுக வேட்பாளர் பேச்சு

காளையார்கோவிலில் அதிமுக, கூட்டணிக் கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் செந்தில்நாதன் பேசினார்.
காளையார்கோவிலில் அதிமுக, கூட்டணிக் கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் செந்தில்நாதன் பேசினார்.
Updated on
1 min read

அதிமுகவின் தேர்தல் அறிக்கையால் திமுக என்ற கட்சியே இருக்காது என அதிமுக வேட்பாளரும், சிவகங்கை மாவட்டச் செயலாளருமான பி.ஆர்.செந்தில் நாதன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவிலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பி.ஆர்.செந்தில் நாதன் பேசும்போது, ''தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக முதல்வர் பழனிசாமிக்குப் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்ட போதிலும், மக்கள் விரும்பும் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையால் திமுக என்ற கட்சியே இருக்காது. அதிமுக கூட்டணிக் கட்சிகள்தான் இருக்கும். நான் காரைக்குடி தொகுதியில் குடியிருந்தாலும், எம்.பி. தேர்தலுக்குப் போட்டியிட்டபோது சிவகங்கை தொகுதியில்தான் எனக்கு அதிக வாக்குகள் அளித்து, வெற்றி பெற வைத்தீர்கள்.

அதற்கு அடுத்தபடியான வாக்குகள்தான் காரைக்குடி தொகுதியில் கிடைத்தது. என மனைவி பிறந்த ஊர் சிவகங்கை தொகுதியில் உள்ளது. என்னை வேறு தொகுதியில் இருந்து வந்தவன் என எதிர்க் கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதற்காகத்தான் இதைக் கூறுகிறேன்.

நான் இத்தொகுதி மக்களுக்கு விசுவாசமாக இருப்பேன். அதிமுக நிர்வாகிகள் கிராமங்களில் கிளை அளவில் கூட்டணிக் கட்சியினரைச் சேர்ந்து கமிட்டி அமைக்க வேண்டும். அதேபோல் நகரங்களில் தெரு அளவில் கமிட்டி அமைக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in