

பொறியியல் படிப்புக்கு விண் ணப்பித்த பொதுவான மாணவர் களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் திங்கள்கிழமை வெளியிட்டார். இந்நிலையில், விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv. edu) செவ்வாய்க்கிழமை வெளி யிடப்பட்டது.
மாணவர்கள் தங்களின் விண் ணப்ப எண்ணை குறிப்பிட்டு தர வரிசையை தெரிந்துகொள்ளலாம். விளையாட்டுப் பிரிவினருக்கான கவுன்சலிங், ஏற்கெனவே அறிவிக் கப்பட்டபடி, ஜூன் 23, 24-ம் தேதி களில் நடக்கும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.