

நாம் தமிழர் கட்சி சார்பில்கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட் பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில், கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக மா.கோமதி அறிவிக்கப்பட்டுள்ளார். பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், தையல் பயிற்சி பள்ளிநடத்தி வருவதுடன் சமூக சேகவராகவும் பணியாற்றி வருகிறார்.
2016-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்த இவர் மாவட்டமகளிர் பாசறை செயலாளராக இருந்து வருகிறார். இவரது கணவர் மா.மாரியப்பன். அக்கட்சியின் தொகுதி செயலாளராக உள்ளார்.
விளாத்திகுளம் தொகுதி
எட்டயபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாலாஜி(30) என்பவர் விளாத்திகுளம் தொகுதிவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருமணமாகாத இவர் இயந்திரவியல் துறையில் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். தற்போது கணினி மையம் மற்றும் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.
ஓட்டப்பிடாரம் தொகுதி
ஓட்டப்பிடாரம் தனித்தொகுதிக்கு அதே ஊரைச் சேர்ந்த சுப்புலட்சுமி (40) அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்தஉள்ளாட்சி தேர்தலில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். இவரது கணவர் மா.சுடலைமணி. இவர், ஓட்டப்பிடாரம் மத்திய ஒன்றியதலைவராக உள்ளார். மூவரும் நேற்றுமுதல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.