உள்ளூர் தொலைக்காட்சிகளில் தேர்தல் விளம்பரம் வெளியிட மாவட்ட கண்காணிப்புக்குழுவின் அனுமதி அவசியம்

கடலூரில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொள்ளும் தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி.
கடலூரில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொள்ளும் தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி.
Updated on
1 min read

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்திரசேகர் சாகமூரி நேற்று கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டதேர்தல் அலுவலரை தலைமை யாகக் கொண்டு 4 உறுப்பினர்களை கொண்ட குழு, உள்ளூர் தொலைக்காட்சி, அனைத்து செய்தித்தாள்கள், வானொலி மற்றும் எஃப்.எம், குறுஞ்செய்திகள், திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை கண்காணிக்கும்.

உள்ளூர் தொலைக்காட்சிகள் தேர்தல் தொடர்பான விளம்பரங் களை ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு அனுமதி பெற்று ஒளிபரப்பு செய்ய வேண்டும். இக்குழு, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியிடப்படும் கட்டணச் செய்திகள் சந்தேகத் திற்கு இடம் அளிக்கும் வகையில்இருப்பின் அவற்றை கண்காணித்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் விளம்பரம் தொடர்பான செலவினங்கள் குறித்து விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 3 தினங்களுக்கு முன்பும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் 7 தினங்களுக்கு முன்பும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும்.

24 மணி நேரத்திற்குள் அனுமதி

மேலும், இக்குழு பெறப்பட்ட தேர்தல் தொடர்பான விளம்பரங் களுக்கு 24 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையம் வகுத் துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்தால் அனுமதி அளிக்கவும், அவற்றிற்கு முரணாக இருப்பின் நிராகரிக்கும் அதிகாரம் கொண்டது.இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டசட்டப் பேரவைத் தேர்தல் வருமானவரி தொடர்பு அலுவலரும் வருமானவரித்துறை துணை இயக்குநருமான நெடுமாறன், மாவட்ட தகவல் அலுவலர் அருள்மொழி, தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன், கேபிள் டிவி வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முரணாக இருப்பின் நிராகரிக்கும் அதிகாரம் கொண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in