நிலக்கோட்டையில் அதிமுக சார்பில் 3-வது முறையாக தேன்மொழி போட்டி: முதல் பட்டியலிலேயே இடம் பெற்றதால் ஆச்சரியம்

நிலக்கோட்டையில் அதிமுக சார்பில் 3-வது முறையாக தேன்மொழி போட்டி: முதல் பட்டியலிலேயே இடம் பெற்றதால் ஆச்சரியம்
Updated on
1 min read

அதிமுக தலைமை வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலிலேயே நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேன்மொழி பெயர் இடம் பெற்றிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் இவர் மூன்றாவது முறையாகப் போட்டியிட உள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக இணைச் செயலாளர் தேன்மொழி. இவர் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைப் பொதுதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நடந்த சட்டப் பேரவைத் தேர்தல் களில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வில்லை.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் நிலக்கோட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்கத்துரை, டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதனால் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தேன்மொழிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் போட்டியிடுவார் என சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பயோடேட்டா

பெயர் : தேன்மொழி

வயது : 58

கணவர் பெயர் : சேகர்

கட்சிப் பதவி : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக இணைச் செயலாளர்

கல்வித் தகுதி : பிளஸ் 2

வகித்த பதவி : 2006 முதல் 2011 வரை மற்றும் 2019 முதல் 2021 வரை எம்.எல்.ஏ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in