ஆற்று மணல் விநியோகத்தை தேர்தல் அறிக்கையில் சேர்க்க ஸ்டாலினிடம் கோரிக்கை மனு

ஆற்று மணல் விநியோகத்தை தேர்தல் அறிக்கையில் சேர்க்க ஸ்டாலினிடம் கோரிக்கை மனு
Updated on
1 min read

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ள மனு:

தமிழகத்தில் 55 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்கள் உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுநர்களும் லாரி தொழிலை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக மணல்வழங்குவதில் பல குளறுபடிகள் ஏற்பட்டு, வாரம் ஒருமுறை மிகசொற்ப அளவே மணல் விநியோகிக்கப்படுகிறது. இதனால் லாரிதொழிலை நம்பியுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நலிவடைந்து வருகின்றன.

மணலுக்கு மாற்றாக அறிவித்த எம் சாண்டும் தரமாக இல்லை. தமிழகத்தில் தொடர் மழையால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, மணல் சேர்ந்துள்ளது. எனவே ஆற்று மணலை அரசு முறைப்படுத்தி வழங்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இதன்மூலம் அரசுக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். அதனால் ஆற்று மணல் வழங்குவதை முறைப்படுத்துவது தொடர்பான அம்சம் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in