Published : 26 Feb 2021 03:16 AM
Last Updated : 26 Feb 2021 03:16 AM

பணி நிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

18 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிவரன்முறை செய்ய வேண்டும். சுழற்சிமுறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பணியிட பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும். விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர்களான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வீரபாண்டியன், ஏஐடியுசி சிவதாஸ், சிஐடியு சிவக்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவனருட்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில், ஏஐடியுசி மாவட்டப் பொருளாளர் அம்பேத்கர் நன்றி தெரிவித்தார்.

இதேபோல, திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சந்திரசேகர ஆசாத் உள்ளிட்டோர் பேசினர். இதில், எல்பிஎப் சார்பிலான டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிக்குமார், சிஐடியு லெனின், ஏஐடியுசி ராமச்சந்திரன், தொழிற்சங்க நிர்வாகிகள் சார்லஸ், அருள்மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே குடும்பத்துடன் சேர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, டாஸ்மாக் அனைத்து சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, வீரையன், கோடீஸ்வரன், வினோதன், ராஜசேகர், வேல்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடி யுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர் ஆகியோர் பேசினர். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் வி.வசந்தகுமார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் சேர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தொமுச டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் தொமுச பழ.அப்பாசாமி, சிஐடியு சி.முருகேசன், எல்எல்எப் மாவட்ட அமைப்பாளர் மா.சுடர்வளவன், சிஐடியு டாஸ் மாக் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.பத்ம காந்தன், எஸ்சி/எஸ்டி ஊழியர் சங்கம் கண்ணப்பன், தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜ் மோகன், விற் பனையாளர் சங்கம் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட் டத்துக்கு, ஒருங்கிணைந்த டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டுக்குழுவின் மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x