

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங் கலம், ராயக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி யாகும் தக்காளி, ராயக்கோட்டை மற்றும் ஓசூர் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆந்தி ரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களுக்கும் அனுப்பிவைக்கப்படுகி றது.
ராயக்கோட்டை தக்காளி மண்டி யில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட மினிலாரி உள்ளிட்ட வாகனங்களில் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கூடை (ஒரு கூடையில் 25 கிலோ) தக்காளி ஏற்றுமதியாகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்ட மடைந்து வந்தனர். இதனால் தக் காளியை பறிக்காமலும், கால்நடை களுக்கு உணவாகவும் விட்டுவிட் டனர். இந்நிலையில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்ததால் தக்காளி விலை உயரத் தொடங்கியது.
தற்போது தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து விலை மேலும் உயர்ந்துள்ளது. ராயக் கோட்டை சந்தைக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு கூடை தக்காளி ரூ.1150 முதல் ரூ.1250 வரை விற்பனையானது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு ஒரு கூடை ரூ.600 வரை விற்பனையானது.
இதுகுறித்து ராயக்கோட்டை தக்காளி வியாபாரி சீனிவாசன் கூறும்போது, மழையாலும், நோய் தாக்குதலாலும் தக்காளி விளைச் சல் குறைந்துள்ளது. சந்தைக்கு 750 முதல் 1000 கூடைகள் வரை மட்டுமே தக்காளி வரத்து உள்ளது. இதனால் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஓசூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.46 முதல் ரூ.50 வரையும், சில்லரை விற்பனையில் ரூ.60 முதல் ரூ.80 வரையும் தக்காளி விற்பனையாகிறது என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய பொறுப்பாளர் சிவப் பிரகாஷ் கூறும்போது, ‘மழை, கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த காற்று காரணமாக நோய் பரவி தக்காளி உற்பத்தி குறைந்து விட்டது. தொடர்ந்து குளிர்காலம் என்பதால் தக்காளி விலை உயர்வு நீடிக்கும். தக்காளி விலை உயர்ந் தாலும், குறைந்தாலும் விவசாயி களுக்கு போதிய லாபம் கிடைப் பதில்லை. விலை ஏற்றத் தாழ்வு களை சமாளிக்க ராயக்கோட்டை யில் குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். தக்காளி மட்டுமல்லாமல் இங்கு சாகுபடி செய்யப்படும் கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது’ என் றார்.