மதுரை அருகே செம்மண் குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

மதுரை அருகே செம்மண் குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
Updated on
1 min read

மதுரை மாவட்டம், மேலூர் அருகே செம்மண் குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி பள்ளிச் சிறுமி உட்பட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

மேலூர் அருகே உள்ள ஏ.கோயில்பட்டியை சேர்ந்தவர் சீமான். இவருக்கு மகள் பாரதி(11), மகன் பார்த்திபன்(11) ஆகிய இரட்டை குழந்தைகள் இருந்தனர். இவர்கள் இருவரும் அருகே உள்ள குறிச்சிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் மதி(9). இவர் ஏ.கோயில்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்கள் வீட்டின் அருகே ஓராண்டுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்த செம்மண் குவாரி உள்ளது. தற்போது மழை பெய்துவருவதால் அந்த குவாரியில் தண்ணீர் தேங்கியிருந் தது. இதில் 3 பேரும் செம்மண் குவாரியில் தேங்கியிருந்த நீரில் நேற்று மீன்பிடிக்கச் சென் றனர்.

அப்போது ஒருவர் கால் தவறி உள்ளே விழுந்ததால் 2 பேரும் சேர்ந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அவர்களும் நீரில் மூழ்கினர். உயிருக்குப் போராடிய அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அந்த 3 பேரும் இறந்துவிட்டதாகக் கூறினர்.

அதைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in