

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, ( வண்டி எண் 06091) மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து இன்று (பிப்.,10) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 3.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.
மற்றொரு சிறப்பு ரயிலான ( வண்டி எண் 06097) மதுரை -ராமேஸ் வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து நாளை (பிப்.,11) காலை 6.45 மணிக்கு புறப்பட்டு காலை 10.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் (வண்டி எண் 06092) ராமேஸ்வரம் - மதுரை விரைவு சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து நாளை காலை 10.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு மதுரையை வந்தடைகிறது.
மேலும், ஒரு சிறப்பு ரயிலான ( வண்டி எண் 06098) ராமேஸ்வரம் - மதுரை விரைவு சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என, மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிஆர்இயூ கோட்டச் செயலாளர் சங்கர நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘‘ தை அமாவாசையையொட்டி நாளை (பிப்.,11) இந்துக்கள் தங்களது மூதாதையர்களுக்கு காசி, ராமேஸ்வரம் போன்ற புன்னியத்தலங்களில் திதி கொடுப்பது வழக்கம்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடிப் பயணிகள் ரயில்கள் தற்போது இல்லை. ராமேஸ்வரத்தில் புனித நீராட அனுமதி வழங்கிய நிலையில், ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் முன்பதிவு செய்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை தவிர்த்து, பயணிகள் ரயிலாக இயக்கவேண்டும், ’’ என்றார்.