

உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்குதீர்ப்பின்படி, சென்னையில் வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசிக்கு சொந்தமான6 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 2017-ம் ஆண்டு பிப்.14-ம் தேதி வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி, சென்னை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்க்கண்ட சொத்துகள் அரசுக்கு உரிமை மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது.
சென்னை வாலஸ் தோட்டம் 1-வது தெரு, புதிய கதவு எண்: 1, சர்வே எண்கள் 61/1, 62, 66/2 (பழைய எண்கள். 63, 65), மனை எண்கள்: 17, 17A மற்றும் 18-க்கு உட்பட்ட (லே அவுட் எண்:L.A 83/59) 6 கிரவுண்டு, 1087 சதுர அடியில் 4 பிரிக்கப்படாத சொத்தில் 581 சதுர அடி மற்றும் அதே தெருவில், கதவு எண் 1-ல் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள்,
சென்னை ராம் நகர், கதவு எண்: 149, டி.டி.கே. சாலையில், சர்வே எண்: 3705-க்குட்பட்ட 2 கிரவுண்ட், 1237 சதுரஅடி நிலத்தில் கட்டப்பட்டுள்ள தரைத்தளம் (2150 சதுர அடி) மற்றும் முதல் தளம் (2150சதுர அடி) கொண்ட வீடு ஆகிய 6 சொத்துகள் லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பங்குதாரர்களாக வி.என். சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோர் உள்ளனர்.முதல் 5 சொத்துகள் ஆயிரம் விளக்கு சார்பதிவாளர் அலுவலகத்திலும், 6-வதுசொத்து மத்திய சென்னை சார்பதிவாளர்அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்துகள் அனைத்தும் 1994-ம் ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட சொத்துகள் தமிழ்நாடு அரசின் சொத்து என உரிய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், மேற்கண்ட சொத்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் சொத்துகள் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, மேற்படி சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை, நிலுவை வாடகை உள்பட) அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என்று சென்னைஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அறிவித்துள்ளார். மேற்கண்ட சொத்துகளை அரசுடமையாக்கும் பணிகள் இன்று (பிப்.8) தொடங்கவுள்ளது என்று ஆட்சியர்அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.