

காய்ச்சலுக்கு ஊசி போட்டுக் கொண்ட புது மாப்பிள்ளை ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தளவாய்புரம் கூட்டுறவு மருத்து வமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே தள வாய்புரம் ஏகேஜி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் முகேஷ்(24). ஒன்றரை மாதத்துக்கு முன்பு பூபாலா என்பவரை திருமணம் செய்தார். கடந்த 21-ம் தேதி காய்ச்சல் மற்றும் இருமல் தொந்தரவு இருந்ததால் தளவாய்புரம் கூட்டுறவு மருத் துவமனைக்கு முகேஷ் சிகிச் சைக்குச் சென்றார். அப்போது மருத்துவர் ஊசி மருந்து செலுத்திய பின் சிறிது நேரத்தில் முகேஷ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து முகேஷின் உறவினர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், தளவாய்புரம் கூட்டுறவு மருத்து வமனையில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது 85 வயது மருத்துவர் ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார். அவரிடம், முகேஷுக்கு செலுத்தப்பட்ட மருந்து மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அதிகா ரிகள் விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவரின் மருத்துவப் படிப்புச் சான்றிதழையும் அதி காரிகள் பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, தமிழ்நாடு மருத்துவமனை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனை முறை யாகப் பதிவு செய்யப்படாதது தெரியவந்தது.
அதையடுத்து, தொடர்ந்து மருத்துவமனை இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சீல் வைக்கப் பட்டது.
இதுகுறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் கூறுகையில், சம் பந்தப்பட்ட மருத்துவமனையில் முதல் கட்ட விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த 85 வயது மருத்துவரின் மருத்துவச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடி க்கை எடுக்கப்படும். அதோடு, மருத்துவமனை உரிய பதிவு செய்யப்படாததால் சீல் வைக் கப்பட்டுள்ளது என்று கூறினார்.