8 ஆண்டுகளாக  திறக்கப்படாத சமத்துவபுரம்: சிங்கம்புணரி அருகே வீணாகும் 100 வீடுகள்

8 ஆண்டுகளாக  திறக்கப்படாத சமத்துவபுரம்: சிங்கம்புணரி அருகே வீணாகும் 100 வீடுகள்
Updated on
1 min read

சிங்கம்புணரி அருகே திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சமத்துவபுரம் வீடுகள் 8 ஆண்டுகளாக திறக்கப்படாமல் வீணாகி வருகின்றன. திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழகம் முழுவதும் அனைத்து சாதி யினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் சமத்துவபுரங்கள் திறக்கப் பட்டன. அதன்படி, சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி வேங்கைப்பட்டியில் 2010-ம் ஆண்டு சமத்துவபுரம் கட்ட முடிவு செய்யப் பட்டது.

இதற்காக ரூ.1.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தெடங்கப்பட்டன. அங்கு ரேஷன் கடை, தார்ச் சாலை, குடிநீர் தொட்டி, தெருவிளக்கு வசதி களுடன் 100 வீடுகள் கட்டப்பட்டன. பணிகள் முடிவடையாத நிலையில் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது.இதையடுத்து கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தலை அடுத்து மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2012-ல் முடிந்தன. அதன்பிறகு 8 ஆண்டுகளாக சமத்துவபுரம் திறக்கப் படவில்லை. இதனால் வீடுகள் பழுதடைந்து வீணாகி வருகின்றன. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளன. சமத்துவபுரத்தைத் திறந்து வீடு இல்லாதோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in