புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப் படம்.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப் படம்.

புதுச்சேரியில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று: 97.49% பேர் குணமடைந்தனர்

Published on

புதுச்சேரியில் இன்று புதிதாக 36 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு இல்லை. 97.49 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன.09) கூறியதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 3,233 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 23, காரைக்கால் - 4, ஏனாம் - 1, மாஹே - 8 என மொத்தம் 36 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 636 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 425 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 162 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 166 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 328 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 51 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 461 (97.49 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 5 லட்சத்து 12 ஆயிரத்து 803 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 4 லட்சத்து 69 ஆயிரத்து 855 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in