குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி திருநங்கைகள் போராட்டம்: போலீஸாருடன் தள்ளுமுள்ளு

குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி திருநங்கைகள் போராட்டம்: போலீஸாருடன் தள்ளுமுள்ளு
Updated on
1 min read

சென்னையில் குடிசை மாற்று வாரிய வீடுகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தி திருநங்கைகள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையின் பல்வேறு பகுதி களில் வசித்து வரும் திருநங்கை கள் தங்களுக்கு தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப் படும் அடுக்கு மாடி குடியிருப்பு களில் வீடு ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என 2009-ம் ஆண்டி லிருந்து கோரி வந்தனர். ஆனால் அவர்களுக்கு வீடு வழங்கப்பட வில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அங்குள்ள அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோப மடைந்த திருநங்கைகள் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளின் அறைகளுக்குள் புகுந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீ ஸார் திருநங்கைகளின் சார்பில் சில பிரதிநிதிகளை தலைமைச் செய லகத்தில் உள்ள உயர் அதிகாரி களிடம் பேச வருமாறு அழைத்தனர். அதற்கு ஒப்புக்கொள்ளாத திருநங் கைகள் அனைவரும் கோட்டை நோக்கி சென்று கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்து ஊர்வல மாக கிளம்பினர். 100-க்கும் மேற்பட் டோர் ஊர்வலமாக சென்றதால் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கண்ணகி சிலை அருகே திருநங்கைகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். போலீஸாரின் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயற்சித்து திருநங்கைகள் முரண்டு பிடித்தனர். இதில் போலீஸாருக் கும், திருநங்கைகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீஸார் வலுக்கட்டாயமாக திருநங்கைகளை கைது செய்து போலீஸ் வேன்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட திருநங்கை கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in