டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்

போக்குவரத்து துறையில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்: தினகரன்

Published on

போக்குவரத்து துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை வழங்குவதற்குரிய உத்தரவினை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜன. 05) தன் ட்விட்டர் பக்கத்தில், "போக்குவரத்து துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை வழங்குவதற்குரிய உத்தரவினை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.

மே 2020-க்குப் பிறகு ஓய்வுபெற இருந்தவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 2019 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் பலன்களை வழங்கிவிட்டு இடைப்பட்ட 4 மாதங்களில் ஓய்வு பெற்றவர்களைக் காத்திருக்க வைப்பது சரியானதல்ல. எனவே, இதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in